சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராடுபவர்கள் உண்மையில் மோடி மீதுதான் கோபமாக இருக்கிறார்கள்: சுஷில் மோடி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் உண்மையில் மோடி மீது தான் கோபமாக இருக்கிறார்கள் என்று கார் துணை முதல்வர் சுஷில் மோடி ஹெரிவித்துள்ளார்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராடுபவர்கள் உண்மையில் மோடி மீதுதான் கோபமாக இருக்கிறார்கள்: சுஷில் மோடி

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் உண்மையில் மோடி மீது தான் கோபமாக இருக்கிறார்கள் என்று கார் துணை முதல்வர் சுஷில் மோடி ஹெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிகார் துணை முதல்வர் சுஷில் மோடி பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது பேசிய அவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு உண்மையில் அச்சட்டத்தின் மீது கோபமில்லை. கடந்த 6 மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி செய்த பணிகளில் மீதுதான் அவர்கள் கோபமாக இருக்கிறார்கள். முக்கியமாக தில்லி ஷாஹீன் பாக் போராட்டம் மோடிக்கு எதிரானதே.

முத்தலாக் தடைச் சட்டம், காஷ்மீரின் 370 பிரிவை ரத்து செய்தது, ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகிய இதுபோன்ற நாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்ததால்தான் மோடி மீது போராட்டக்காரர்கள் கோபத்தில் உள்ளார்கள். 

சமீபகாலமாக நாட்டில் முஸ்லிம்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களை இணைத்து ஒரு கூட்டணி உருவாக்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஹிந்து மதத்தினர் அவர்களை புறக்கணிப்பதாக ஒரு பிம்பம் உருவாகிறது. ஆனால் ஒருபோதும் நாங்கள் அவ்வாறு நடக்க அனுமதிக்க மாட்டோம்' என்று பேசியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com