உ.பி. மாவட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட வேண்டும்: சாதுக்கள் கோரிக்கை

பிரயாகராஜில் நடந்து வரும் மாக் மேளாவில் உள்ள புனிதர்களும், பார்வையாளர்களும் இப்போது உத்தரபிரதேசத்தில்
உ.பி. மாவட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட வேண்டும்: சாதுக்கள் கோரிக்கை

பிரயாகராஜில் நடந்து வரும் மாக் மேளாவில் பங்கேற்கும் சாதுக்களும், பார்வையாளர்களும் முகலாயப் பெயரைக் கொண்ட நகரங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  இப்போது உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசாங்கத்திடம் அவர்கள் இந்த மாற்றத்தைக் கோருகின்றனர். 

பஸ்தி மாவட்டத்தின் பெயரை வசிஷ்ட நகர் என்று மாற்றும் திட்டத்தை வரவேற்ற சாதுக்கள், மாநிலத்தில் ஏராளமான நகரங்களை முகலாய ஆட்சியாளர்களால் மறுபெயரிட்டதாகவும், இந்த நகரங்களுக்கு அவற்றின் அசல் பெயர்களைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

"பிரயாகராஜ் அலகாபாத் என்று மாறியிருக்க, யோகி ஆதித்யநாத் அதை மீண்டும் பிரயாகராஜ் என்று மாற்றியுள்ளார். அதே போல், இதுபோன்ற பிற நகரங்களுக்கு அவற்றின் அசல் இந்துப் பெயர்களை திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால், இந்துக்களுக்காக இந்துக்களால் நடத்தப்படும் ஒரு அரசாங்கம் இப்போது எங்களிடம் உள்ளது" என்று அகில் பாரதியா தாண்டி சுவாமி பரிஷத்தைச் சேர்ந்த சுவாமி மகேஷாஷ்ராம் மகாராஜ் கூறினார்

அதே பிரிவைச் சேர்ந்த சுவாமி பிரம்மஸ்ராம் மகாராஜ் கூறுகையில், பல்வேறு காலங்களில் படையெடுப்பாளர்கள் தங்கள் மத விருப்பங்களுக்கு ஏற்ப நகரங்கள் மற்றும் இடங்களின் பெயர்களை மாற்றியுள்ளனர் என்று கூறினார். "இது முகலாயராக இருந்தாலும் சரி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, இருவரும் பெயர்களை மாற்றினர், ஆனால் இப்போது யோகி ஆதித்யநாத் இந்த இடங்களுக்கு அவற்றின் அசல் பெயர்களைக் கொடுத்து அந்த உரிமையை மீட்டு அமைக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், ஆசாம்கர், அலிகார், முசாபர்நகர், ஷாஜகான்பூர், ஃபதேபூர், புலந்த்ஷாஹர் மற்றும் ஆக்ரா போன்ற நகரங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று சாதுக்கள் விரும்புவதாக அவர்களது வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com