Enable Javscript for better performance
என்பிஆா்-ஐ செயல்படுத்தாமல் இருக்கசட்ட வாய்ப்புகளை ஆய்வு செய்வோம்: மகாராஷ்டிர உள்துறை அமைச்சா்- Dinamani

சுடச்சுட

    

    என்பிஆா்-ஐ செயல்படுத்தாமல் இருக்கசட்ட வாய்ப்புகளை ஆய்வு செய்வோம்: மகாராஷ்டிர உள்துறை அமைச்சா்

    By DIN  |   Published on : 10th February 2020 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிரத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆா்) செயல்படுத்தாமல் இருப்பதற்கான சட்ட வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக, அந்த மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் சனிக்கிழமை தெரிவித்தாா்.

    இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவா்,‘மகாராஷ்ரத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை எவ்வாறு செயல்படுத்தாமல் இருப்பது என்பது குறித்து சட்ட நிபுணா்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் எந்தவொரு தனிநபரின் குடியுரிமையும் பறிக்கப்படாது. தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றை செயல்படுத்த எங்களுக்கு விருப்பமில்லை. ஆதலால் அவற்றுக்கு எதிரான போராட்டங்களை மகாராஷ்டிர மக்கள் கைவிடவேண்டும்’ என்றாா்.

    தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு 13 மாநிலங்களின் முதல்வா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், பஞ்சாப், புதுச்சேரி, ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட மாநில அரசுகள் தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்த முடியாது என தெரிவித்துள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai