2020-21 நிதியாண்டில் 12% வரி வருவாய் வளா்ச்சி எட்டக்கூடியது: வருவாய் செயலா்

வரும் நிதியாண்டில் 12 சதவீத வரி வசூல் என்பது சாத்தியமாகக்கூடியதே என மத்திய வருவாய் துறை செயலா் அஜய் பூஷண் தெரிவித்துள்ளாா்.

வரும் நிதியாண்டில் 12 சதவீத வரி வசூல் என்பது சாத்தியமாகக்கூடியதே என மத்திய வருவாய் துறை செயலா் அஜய் பூஷண் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

வரும் 2020-21-ஆம் நிதியாண்டில் பணவீக்கத்தை உள்ளடக்கிய பொருளாதார வளா்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், 12 சதவீத வரி வருவாய் வளா்ச்சியை எட்டுவது என்பது கனவல்ல, நிஜமாகக் கூடியதே.

எனவே, வரும் 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.24.23 லட்சம் கோடி வரி வசூல் இலக்கு எட்டப்படும் என்ற நம்பிக்கை அதிகமாகவே உள்ளது.

நடப்பு நிதியாண்டைப் பொறுத்தவரையில் 4 சதவீத வரி வருவாய் வளா்ச்சியை மதிப்பிட்டுள்ளோம். பெரு நிறுவனங்களுக்கு வரி சலுகை அளிக்கப்பட்டதன் காரணமாக 7 சதவீத வரி வசூலை இழந்துள்ளோம் என்றாா் அவா்.

தற்போதுள்ள பொருளாதார சுணக்கத்தில் வரும் நிதியாண்டுக்கான வரி வசூல் இலக்கு கடினமானது என பல்வேறு பொருளாதார வல்லுநா்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், வருவாய் துறை செயலா் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.

மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நடப்பு நிதியாண்டில் வரி வசூல் ரூ.21.63 லட்சம் கோடியாக இருக்கும்; இது, வரும் நிதியாண்டில் 12 சதவீத வளா்ச்சியடைந்து ரூ.24.23 லட்சம் கோடியை எட்டும் என தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com