தூய்மை இந்தியா: மத்தியப் பிரதேசத்தில் கழிவறைக் கட்டியதாக ரூ.540 கோடி முறைகேடு

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுமார் 4.5 லட்சம் கழிவறைகள் கட்டியதாகக் கணக்குக் காட்டி ரூ.540 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
தூய்மை இந்தியா: மத்தியப் பிரதேசத்தில் கழிவறைக் கட்டியதாக ரூ.540 கோடி முறைகேடு


மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுமார் 4.5 லட்சம் கழிவறைகள் கட்டியதாகக் கணக்குக் காட்டி ரூ.540 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், பல்வேறு இடங்களில் சுமார் 4.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டதாக கணக்குக் காட்டி ரூ.540 கோடி முறைகேடு நடந்திருப்பதும், கணக்குக் காட்டப்பட்ட ஒரு இடத்தில் கூட கழிவறை இல்லாததும் தெரிய வந்துள்ளது.

வேறு இடங்களில் கட்டப்பட்ட கழிவறைகளின் புகைப்படங்களும் ஆவணங்களுடன் இணைக்கப்பட்டிருந்ததுதான் முறைகேட்டின் உச்சம்.

லக்கட்ஜாம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் சிலர், தங்கள் வீடுகளில் கழிவறைக் கட்ட விண்ணப்பித்தபோது, அவர்களது பெயர்களில் ஏற்கனவே கழிவறை வசதி செய்ய மத்திய அரசின் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் கொடுத்த போதுதான் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மாநிலம் முழுவதும் சுமார் 4.5 லட்சம் கழிவறைகள் கட்டப்பட்டதாக வெறும் கணக்கு மட்டுமே காட்டப்பட்டு, ரூ.540 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com