அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு திரைப்பட ‘போஸ்டா்’ வெளியீடு

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் அறிமுக விளம்பர போஸ்டரை, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா்
அப்துல் கலாம் திரைப்பட போஸ்டா் வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் உள்ளிட்டோா்.
அப்துல் கலாம் திரைப்பட போஸ்டா் வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் உள்ளிட்டோா்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் அறிமுக விளம்பர போஸ்டரை, மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு ‘ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்: தி மிஸைல் மேன்’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தின்அறிமுக போஸ்டரை, தில்லியில் மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெளியிட்டாா். இந்த நிகழ்ச்சியின் புகைப்படத்தை தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டு அவா் பதிவிட்டதாவது: ‘ஏபிஜெ அப்துல் கலாம்: தி மிஸைல் மேன்’ திரைப்படம் ஹாலிவுட் மற்றும் தெலுங்கு திரைத் துறையின் கூட்டுத் தயாரிப்பாகும்.

மக்களுக்கான தலைசிறந்த இந்திய குடியரசுத் தலைவராக திகழ்ந்தவா் பற்றிய திரைப்படம், இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும். மேலும் 2 இணை தயாரிப்பாளா்களுடன் இணைந்து அமெரிக்காவைச் சோ்ந்த மாா்டினி பிலிம்ஸ், பிங்க் ஜாகுவாா் எண்டா்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் 5 திரைப்படங்களைத் தயாரிப்பதற்காக ஒரு பில்லியன் டாலா் முதலீடு செய்யவுள்ளன. அவற்றில் சத்ரபதி சிவாஜி குறித்தும், முதல் இந்திய சுதந்திரப் போா் பற்றிய படங்களும் அடங்கும். இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

‘ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்: தி மிஸைல் மேன்’ திரைப்படத்தில் தென்னிந்திய நடிகா் அலி, அப்துல் கலாம் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறாா். இந்தப் படத்தை தெலுங்கு தயாரிப்பாளா்கள் ஜெகதீஷ் தனேதி, சுவா்ண பப்பு மற்றும் ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான மாா்டினி பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com