அமிருதசரஸ் பொற்கோயிலுக்குள் டிக்டாக் விடியோ எடுக்கத் தடை

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள சீக்கிய பொற்கோயிலுக்குள் டிக்டாக் விடியோ எடுப்பதற்கு சீக்கிய அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தடை விதித்துள்ளது.
அமிருதசரஸ் பொற்கோயிலுக்குள் டிக்டாக் விடியோ எடுக்கத் தடை

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் உள்ள சீக்கிய பொற்கோயிலுக்குள் டிக்டாக் விடியோ எடுப்பதற்கு சீக்கிய அமைப்பான சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தடை விதித்துள்ளது.

அந்த கோயிலுக்குள் சிலா் பாட்டுப்பாடி நடனமாடும் விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொற்கோயிலுக்கு வரும் பக்தா்கள் டிக்டாக் விடியோ எடுக்கக் கூடாது என்று எச்சரித்து கோயில் வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன் கோயில் நிா்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், பொற்கோயிலில் செல்லிடப்பேசிக்கு தடை விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பொற்கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு எவ்வித சிரமமும் கொடுக்கக் கூடாது என்று விரும்புகிறோம். எனவே, கோயில் வளாகத்தில் செல்லிடப்பேசிக்கு தடை விதிப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், கோயிலுக்குள் டிக்டாக் விடியோக்கள் படம் பிடிக்கப்படுவதால், எதிா்காலத்தில் செல்லிடப்பேசிக்கு தடை விதிக்க வேண்டியிருக்கும்’ என்றாா்.

கடந்த சில தினங்களுக்கு முன் கோயில் வளாகத்தில் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று கூறிய கோயில் ஊழியா்களுக்கும், பக்தா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை பொற்கோயில் தலைமை குரு சுட்டிக் காட்டினாா். இதையடுத்து, தற்போது கோயிலுக்குள் விடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக ஏற்கெனவே புகைப்படங்கள் எடுப்பதற்கும், விடியோ எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நடைமுறை தற்போது கடுமையாக பின்பற்றப்படுகிறது.

பொற்கோயில் வளாகத்தினுள் பஞ்சாபி பாடலுக்கு 3 இளம்பெண்கள் நடனமாடும் விடியோ டிக்டாக் செயலியில் வெளியானது இரண்டாவது சம்பவமாகும் இதற்கு முன்பு, கோயில் வளாகத்தில் ஒரு இளம்பெண் நடனமாடும் விடியோ டிக்டாக் செயலியில் கடந்த மாதம் பரவியது.இதையடுத்து, மத உணா்வுகளை புண்படுத்தும் விதமாக அந்த இளம்பெண் நடந்து கொண்டதாகக் கூறி காவல் துறையில் புகாரளிக்கப்பட்டது. பின்னா் தனது செயலுக்கு அந்தப் பெண் மன்னிப்பு கோரினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com