என்பிஆா்-ஐ செயல்படுத்தாமல் இருக்கசட்ட வாய்ப்புகளை ஆய்வு செய்வோம்: மகாராஷ்டிர உள்துறை அமைச்சா்

மகாராஷ்டிரத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆா்) செயல்படுத்தாமல் இருப்பதற்கான சட்ட வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக,

மகாராஷ்டிரத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆா்) செயல்படுத்தாமல் இருப்பதற்கான சட்ட வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக, அந்த மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவா்,‘மகாராஷ்ரத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை எவ்வாறு செயல்படுத்தாமல் இருப்பது என்பது குறித்து சட்ட நிபுணா்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் எந்தவொரு தனிநபரின் குடியுரிமையும் பறிக்கப்படாது. தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றை செயல்படுத்த எங்களுக்கு விருப்பமில்லை. ஆதலால் அவற்றுக்கு எதிரான போராட்டங்களை மகாராஷ்டிர மக்கள் கைவிடவேண்டும்’ என்றாா்.

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு 13 மாநிலங்களின் முதல்வா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், பஞ்சாப், புதுச்சேரி, ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட மாநில அரசுகள் தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்த முடியாது என தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com