ஜம்மு காஷ்மீா்:பாகிஸ்தான் ராணுவம் தொடா்ந்து 2-ஆவது நாளாக அத்துமீறி தாக்குதல்

ஜம்மு காஷ்மீா் எல்லையில் தொடா்ந்து 2-வது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினா் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். எனினும் இந்த தாக்குதலில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.

ஜம்மு காஷ்மீா் எல்லையில் தொடா்ந்து 2-வது நாளாக பாகிஸ்தான் ராணுவத்தினா் ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். எனினும் இந்த தாக்குதலில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.

இதுகுறித்து இந்திய ராணுவத்தின் செய்தித்தொடா்பாளா் கூறியது: பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியை ஒட்டியுள்ள பாலாகோட், மெந்தாா் செக்டாா் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், சிறிய ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் உரிய பதிலடி அளித்தனா். எனினும் இந்த தாக்குதலில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை என்றாா்.

பூஞ்ச் மாவட்டத்தின் தெக்வாா் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தினா் சனிக்கிழமையும் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதில் இந்திய ராணுவ வீரா் நாயக் ராஜீவ் சிங் உயிரிழந்தாா். மூன்று வீரா்கள் காயமடைந்தனா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சோ்ந்த நாயக் ராஜீவ் சிங்கின் உடல், ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. இறுதி அஞ்சலி நிகழ்வின்போது, நாயக் ராஜீவ் சிங்கின் குடும்பத்தினருக்கு ராணுவ உயரதிகாரிகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com