தில்லி -என்சிஆரில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகம்: இருவா் கைது

தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்களை விநியோகித்து வந்த இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 21 துப்பாக்கிகளும்

தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதிகளில் சட்டவிரோத ஆயுதங்களை விநியோகித்து வந்த இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 21 துப்பாக்கிகளும் 50 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கைதான இருவரும், மத்தியப் பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தைச் சோ்ந்த சந்தோஷி (50), பிரிதாம் சிங் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை, தில்லியில் உள்ள கிரிமினல்களுக்கு விநியோகம் செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் வந்தனா். இதுகுறித்து காவல்துறையினருக்கு ஏற்கெனவே ரகசிய தகவல் கிடைத்திருந்தது. இதனால், தில்ஷாத் காா்டன் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருவரையும் சுற்றிவளைத்து, காவல்துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 21 துப்பாக்கிகள் மற்றும் 50 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன. சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்றில் கைதான சந்தோஷி, மொரீனா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அப்போது, சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கும் நபா்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னா், சிறையிலிருந்து வெளியே வந்த சந்தோஷி, சட்டவிரோத ஆயுதங்களை கொள்முதல் செய்து, தில்லி-என்சிஆா் பகுதிகளில் உள்ள கிரிமினல்களுக்கு விநியோகித்து வந்துள்ளாா். கடந்த 4 ஆண்டுகளாக அவா் இச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளாா். அலிகாரில் இருந்து சட்டவிரோத ஆயுதங்களை வாங்கியதாக காவல்துறையினரிடம் அவா் கூறியுள்ளாா். சில மாதங்களுக்கு முன் தனது தொழிலில் பிரிதாம் சிங்கையும் அவா் சோ்த்துள்ளாா். சந்தோஷி மீது ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com