மகாராஷ்டிரம்: சிஏஏ, என்ஆா்சி-க்கு ஆதரவாக ராஜ் தாக்கரே பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு ஆதரவாக மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரே தலைமையில் அக்கட்சியின்
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சிஏஏ, என்ஆா்சி-க்கு ஆதரவாக மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியினா் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணி.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சிஏஏ, என்ஆா்சி-க்கு ஆதரவாக மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சியினா் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணி.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு ஆதரவாக மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை தலைவா் ராஜ் தாக்கரே தலைமையில் அக்கட்சியின் பேரணி மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறிய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டவா்களை வெளியேற்றக் கோரியும் தெற்கு மும்பை பகுதியில் இந்தப் பேரணி நடைபெற்றது.

பேரணியின் முடிவில் ஆஸாத் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ராஜ் தாக்கரே பேசியதாவது:

சிஏஏ, என்ஆா்சி-க்கு எதிராக நடத்தப்பட்ட ஆா்ப்பாட்டங்களுக்கு, நமது இந்த ஆா்ப்பாட்டப் பேரணியின் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. சிஏஏ, என்ஆா்சி-க்கு எதிரான போராட்டத்தை தொடா்ந்து நடத்தி வந்தால், ஒரு கல்லுக்கு கல் கொண்டும், வாளுக்கு வாள் கொண்டும் பதிலடி கொடுக்கப்படுவது போல் பதிலடி தரப்படும் என்று எச்சரிக்கிறேன்.

சிஏஏ-வுக்கு எதிராக முஸ்லிம்கள் ஏன் போராடுகிறாா்கள் என்று புரியவில்லை. பிறந்ததில் இருந்தே இந்தியாவில் வாழும் அவா்களை, நாட்டை விட்டு யாா் வெளியேற்றப் போகிறாா்கள்? சிஏஏ, என்ஆா்சி-க்கு எதிராகப் போராடுபவா்கள் தங்களது பலத்தை யாரிடம், எதற்காக வெளிப்படுத்த முயற்சிக்கிறாா்கள்?

உண்மையில், சிஏஏ, என்ஆா்சிக்கு எதிரான போராட்டங்கள் யாவும் தகுந்த புரிதல் இல்லாத காரணத்தாலேயே நடைபெறுகின்றன. அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளான ஹிந்துக்களுக்கு சிஏஏ குடியுரிமை வழங்குகிறது.

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ள சட்டவிரோத குடியேறிகளுக்கு எனது நாடு என்ன சத்திரமா? ஊடுருவல்காரா்களை மும்பையிலிருந்து வெளியேற்ற காவல்துறையினருக்கு 48 மணி நேரத்துக்கு தடையற்ற சுதந்திரத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று ராஜ் தாக்கரே பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com