புதுதில்லி தொகுதியில் வெற்றி பெற்றார் கேஜரிவால்

ஆம் ஆத்மி தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் புதுதில்லி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
புதுதில்லி தொகுதியில் வெற்றி பெற்றார் கேஜரிவால்


ஆம் ஆத்மி தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் புதுதில்லி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

70 பேரவைத் தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வரும் ஆம் ஆத்மி இரவு 8.20 மணி நிலவரப்படி 62 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆம் ஆத்மி 55 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 8 தொகுதிகளில் ஆம் ஆத்மி 7 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

தில்லியில் ஆட்சியமைக்க 36 இடங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி ஏற்கெனவே 55 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது.

இந்நிலையில், புதுதில்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கேஜரிவாலும் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் சுனில் குமார் யாதவைவிட சுமார் 21 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

கேஜரிவால் 46,758 வாக்குகள் பெற்றார். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 61.1 சதவீதமாகும். சுனில் குமார் யாதவ் 25,061 வாக்குகள் பெற்றார். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 32.75 சதவீதமாகும். காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 3,220 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

இரவு 8.27 மணி நிலவரப்படி இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி 53.60 சதவீத வாக்குகளும், பாஜக 38.49 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 4.27 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com