கள்ளக் காதலுக்கு தலைநகராகிறதா பெங்களூரு? 'காதல்' கொலைகள் அதிகரிப்பு

பிப்ரவரி மாதம் என்றாலே காதலர்களுக்குக் கொண்டாட்டமான மாதம்தான். அந்த வகையில், காதலர்கள் பலரும் காதலர் தினத்தை எவ்வாறெல்லாம் கொண்டாடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள்.
கள்ளக் காதலுக்கு தலைநகராகிறதா பெங்களூரு? 'காதல்' கொலைகள் அதிகரிப்பு


பிப்ரவரி மாதம் என்றாலே காதலர்களுக்குக் கொண்டாட்டமான மாதம்தான். அந்த வகையில், காதலர்கள் பலரும் காதலர் தினத்தை எவ்வாறெல்லாம் கொண்டாடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள்.

இந்த மாதத்தில், பெங்களூரு பற்றிய ஒரு செய்தி ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காரணம்.. காதல், கள்ளக் காதல் தொடர்பான செய்தி அது.

இந்தியாவிலேயே கள்ளக் காதலின் தலைநகராக மாறும் அளவுக்கு, பெங்களூருவில் கள்ளக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன.

வழக்கு 1: மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண்மணி தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரைக் கொல்கிறார். இந்த வழக்கில் இருந்து தப்பிக்க மாண்டியா காவல்நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளருடன் நட்பை வளர்க்கிறார். இப்படியே சுமார் மூன்று மாதத்துக்கு மேல் அவர் இந்த வழக்கில் கைதாவதில் இருந்து தப்பித்து வருகிறார்.

வழக்கு 2: வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிந்த மனைவி, கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது வீசிக் கொல்ல முயல்கிறார்.

வழக்கு 3: ராஜகோபால நகரைச் சேர்ந்த பெண், தனது கணவரின் நண்பர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததால், இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தார்.

வழக்கு 4: விஜயபுராவில் வேறு ஒரு நபருடன் தகாத உறவை வைத்திருந்த சகோதரியை அடித்துக் கொல்கிறார் சகோதரர்.

இந்த வழக்குகள் எல்லாம் ஒரே மாதத்தில் நடந்த சம்வங்கள்.

காதல், கள்ளக் காதல், முறைகேடான உறவு போன்றவை பல நேரங்களில் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

வேறு எந்த நகரத்திலும் இல்லாத வகையில் 'க்ளீடன்' என்ற இணையதளத்தில் (பிற நபர்களுடன் நட்பு கொள்ளுதல்) பெங்களூருவைச் சேர்ந்த 1.35 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 43,200 பெண்களும், 91,800 ஆண்களும் அடங்குவர்.

ஏற்கனவே, தேசிய குற்றப் பதிவு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கொலைக்கு முக்கியக் காரணங்களில் காதல் மற்றும் காதல் விவகாரம் முதல் இடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. 2001 மற்றும் 2017ல், கர்நாடகம், தில்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொலைக்கான முக்கியக் காரணங்களில் காதல் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

இது குறித்து காவல்துறை மூத்தத் தலைவர் கூறுகையில், ஆம், குற்றங்களில் மிக முக்கிய இடத்தில் முறைகேடான உறவு முதல் இடத்தில் உள்ளது. இளைஞர்கள் செய்யும் கொலை மற்றும் கொலை முயற்சிகளில் ஒன்று பழிக்கு பழி வாங்கும் விஷயமாகவோ அல்லது ஒரு பெண் தொடர்பான விஷயமாகவோ இருக்கிறது என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com