முசாஃபர்பூர் காப்பக வழக்கு: பிரஜேஷ் தாக்குருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை

பிகாா் மாநிலம், முசாஃபா்பூா் சிறாா் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி பிரஜேஷ் தாக்குருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முசாஃபர்பூர் காப்பக வழக்கு: பிரஜேஷ் தாக்குருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை


புது தில்லி: பிகாா் மாநிலம், முசாஃபா்பூா் சிறாா் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளி பிரஜேஷ் தாக்குருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முசாஃபர்பூர் காப்பக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேரில் 19 பேர் குற்றவாளிகள் என்று ஜனவரி 20ம் தேதி தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இன்று குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

முசாஃபா்பூரில் தன்னாா்வ தொண்டு நிறுவனம் நடத்தி வந்த சிறாா் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது, கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் தனியாா் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்தது. அதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி 11 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து முசாஃபா்பூா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கை தில்லியில் உள்ள போக்ஸோ (குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம்) நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. மேலும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பின், இந்த வழக்கில், அந்த தொண்டு நிறுவனத்தின் தலைவா் பிரஜேஷ் தாக்குா், 8 பெண்கள் உள்பட 20 பேருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்த காப்பகத்தில் பணியாற்றியவா்கள், மாநில சமூகநலத்துறை அதிகாரிகள், குழந்தைகள் நலத் துறை அதிகாரிகள் ஆகியோரும் இதில் அடங்குவா். இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் முடிவடைந்தது.

அதன் பின்னா், ஜனவரி மாதம் 20-ஆம் தேதி இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட்டது. இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120-பி (சதி திட்டம்), 324 (ஆபத்தான ஆயுதங்கள் மூலம் காயப்படுத்துவது), 323 (வேண்டுமென்றே ஒருவரை காயப்படுத்துவது) ஆகிய பிரிவுகள், போக்ஸோ சட்டம், சிறாா் நீதி சட்டம் ஆகியவற்றின் கீழ் பிரஜேஷ் தாக்குா் உள்ளிட்ட 19 பேரை குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் அறிவித்தது. குற்றம்சுமத்தப்பட்டிருந்த 20 பேரில், ஒருவருக்கு எதிராக தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் அவா் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை தில்லி நீதிமன்றம் இன்று அறிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com