ஷகீன் பாக் போராட்டத்தை எதிர்த்தோம், இன்றைக்கும் எதிர்க்கிறோம்: தில்லி பாஜக தலைவர்

தில்லி ஷகீன் பாக் போராட்டத்தை நாங்கள் நேற்றும் எதிர்த்தோம், இன்றைக்கும் எதிர்க்கிறோம் என தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
ஷகீன் பாக் போராட்டத்தை எதிர்த்தோம், இன்றைக்கும் எதிர்க்கிறோம்: தில்லி பாஜக தலைவர்


தில்லி ஷகீன் பாக் போராட்டத்தை நாங்கள் நேற்றும் எதிர்த்தோம், இன்றைக்கும் எதிர்க்கிறோம் என தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்று 2 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இந்தத் தேர்தலில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான ஷகீன் பாக் போராட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தலில் தோல்வியைச் சந்தித்தபிறகும் நாங்கள் இன்னும் ஷகீன் பாக் போராட்டத்தை எதிர்க்கிறோம் என தில்லி பாஜக மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,

"நாங்கள் வெறுப்பு அரசியலை செய்யவில்லை. தேர்தலின்போது நிறைய விஷயங்கள் குறித்து பேசப்பட்டது. ஆனால், 60 நாட்களாக ஷகீன் பாக் சாலைகள் தடை செய்யப்பட்டிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதை நாங்கள் நேற்றும் எதிர்த்தோம், இன்றைக்கும் எதிர்க்கிறோம்.

நான்தான் மாநிலத் தலைவர். எனவே, தேர்தல் தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்கிறேன். நான் முன்பே கூறியதுபோல், தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம். தில்லி பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற என்னுடைய கணிப்பு தவறு. ஒருசில விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு எண்ணினேன். 48 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன, குடிநீர் பிரச்னை உள்ளன. இதன் அடிப்படையில், மக்கள் கஷ்டங்களை எதிர்கொள்வதால் அவர்களை பொறுப்பை வேறு யாரிடமாவது வழங்குவார்கள் என எண்ணினேன். 

தில்லி மக்களுக்கு நன்றி. கடின உழைப்பைப் போட்ட தொண்டர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் நிறைய செய்துள்ளனர். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். அரவிந்த் கேஜரிவாலுக்கு வாழ்த்துகள். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com