ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அரவிந்த் கேஜரிவால்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுத்தியுள்ளார்.
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அரவிந்த் கேஜரிவால்


தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுத்தியுள்ளார்.

70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (செவ்வாய்கிழமை) காலை முதல் இரவு வரை நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி 62 தொகுதிகளைக் கைப்பற்றி மகத்தான வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, வரும் 16-ஆம் தேதி தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் மூன்றாவது முறையாக பதவியேற்கிறார்.

இந்நிலையில், தில்லியில் ஆட்சியமைக்க உரிமை கோரி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுக்கு அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

இதனிடையே, தில்லி தலைமைத் தேர்தல் அலுவலர் ரண்வீர் சிங் தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாகத் தேர்வான சட்டப்பேரவை உறுப்பினர்களின் பட்டியலுடன் கூடிய அரசியலமைப்பு அறிவிக்கையை துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலிடம் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com