8 சிறுத்தைகள் பலி: கிராம மக்கள் அதிர்ச்சி

பிஜ்னோரின் நங்கலா நத்தா கிராமத்தில் மூன்று வயது பெண் சிறுத்தை இறந்து கிடந்தது.
8 சிறுத்தைகள் பலி: கிராம மக்கள் அதிர்ச்சி

பிஜ்னோரின் நங்கலா நத்தா கிராமத்தில் மூன்று வயது பெண் சிறுத்தை இறந்து கிடந்தது. கடந்த 40 நாட்களில் சிறுத்தைகளின் இறப்பு எண்ணிக்கையை எட்டை எட்டியுள்ளது.

இங்குள்ள வன அதிகாரிகளின் கூற்றுப்படி, சிறுத்தையின் சடலம் செவ்வாய்க்கிழமை அன்று கரும்பு வயலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. விவசாயிகள் அதைக் கண்டுபிடித்து வன ஊழியர்களுக்கும் போலீஸாருக்கும் தகவல் அளித்தனர்.

பிரேதப் பரிசோதனைக்காக பரேலியில் உள்ள இந்தியக் கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு (ஐ.வி.ஆர்.ஐ) அனுப்பப்பட்ட அச்சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தபோது, மூன்று நாட்கள் முன்னரே இறந்துள்ளது என்றும், அதற்கு சில காயங்கள் இருந்ததாகவும் தெரிந்தது.

தம்பூர் வன ரேஞ்சர் அரவிந்த் ஸ்ரீவாஸ்தவா இது குறித்து கூறுகையில்: "சிறுத்தை இயற்கை மரணம் அடைந்ததாகத் தெரிகிறது, ஆனால் நாங்கள் சடலத்தை ஐ.வி.ஆர்.ஐக்கு அனுப்புகிறோம், அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின்னர்தான் அதன் மரணத்தின் உண்மையான காரணம் தெரியும்."

மூன்று நாட்களுக்கு முன்பு, மாவட்டத்தில் உள்ள பரேரா கிராமத்தில் கரும்பு வயலில் மற்றொரு பெண் சிறுத்தை சடலம் கண்டெடுக்கப்பட்டது.

முன்னதாக, பிஜ்னோர், மொராதாபாத் மற்றும் படான் ஆகிய இடங்களில் மூன்று சிறுத்தைகள் கிராமவாசிகளால் கொல்லப்பட்டன, நான்காவது புலாந்த்ஷாரில் வயோதிகம் தொடர்பான பிரச்னைகளால் இறந்தது.

சாலை மற்றும் ரயில் விபத்துக்களில் முறையே இரண்டு சிறுத்தைகள் பலியாகின. ஏழாவது சிறுத்தையின் இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் அது சில நோய்களுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மாதம் ஆறு சிறுத்தைகளின் மரணம் நிகழ்ந்த நிலையில், தற்போது பிஜ்னோரில் மீண்டும் அடுத்தடுத்து இரண்டு சிறுத்தைகள் இம்மாதம் இறந்தது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை விளைவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com