தில்லியில் 2013லேயே காங்கிரஸ் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: பி.சி.சாக்கோ

தில்லியில் 2013லேயே காங்கிரஸ் வீழ்ச்சி தொடங்கிவிட்டது, இழந்த வாக்கு வங்கியை மீட்டெடுக்க இனி வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ புதன்கிழமை தெரிவித்தார்.
தில்லியில் 2013லேயே காங்கிரஸ் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: பி.சி.சாக்கோ

தில்லியில் 2013லேயே காங்கிரஸ் வீழ்ச்சி தொடங்கிவிட்டது, இழந்த வாக்கு வங்கியை மீட்டெடுக்க இனி வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ புதன்கிழமை தெரிவித்தார்.

தில்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி 62 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 

பாஜக 8  இடங்களில் வென்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு 53 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு கடந்த தேர்தலைவிட 6 சதவீத வாக்குகள் அதிகமாக அதாவது 38 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. 

கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். 

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறுகையில்,

கடந்த 2013ஆம் ஆண்டில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தபோது முதல் தில்லியில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. குறிப்பாக புதிதாக உருவாக ஆம்ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை கையகப்படுத்திக்கொண்டது. அதை காங்கிரஸ் கட்சியால் இனி ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com