மானியமில்லாத சிலிண்டர் விலை கடும் உயர்வு

தொடர்ந்து ஆறாவது மாதமாக மானியமில்லாத சிலிண்டர் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லாத சிலிண்டர் விலையை சென்னையில் ரூ.147 அளவுக்கு உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மானியமில்லாத சிலிண்டர் விலை கடும் உயர்வு


தொடர்ந்து ஆறாவது மாதமாக மானியமில்லாத சிலிண்டர் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லாத சிலிண்டர் விலையை சென்னையில் ரூ.147 அளவுக்கு உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 
இன்று அறிவிக்கப்பட்ட விலை உயர்வு விவரம்: 
புது தில்லியில் ரூ.144.5 உயர்ந்து தற்போது ரூ.858.5 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ரூ.149 உயர்த்தப்பட்டு, சிலிண்டர் விலை ரூ.896 ஆக உயர்ந்துள்ளது. மும்பையில் ரூ.145 உயர்ந்து, ரூ.829 ஆகவும், சென்னையில் ரூ.147 உயர்த்தப்பட்டு, ரூ.881 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இண்டேன் நிறுவனம் மூலம் சுமார் 11 கோடி வீடுகளுக்கு எரிவாயு உருளை விநியோகிகப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அந்த வகையில் சென்னையில், 14.2 கிலோ எடைகொண்ட மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் கடந்த ஜனவரி மாதம் ரூ.19 உயர்த்தப்பட்டது. இதன் மூலம் இதுவரை ரூ.714க்கு விற்பனை செய்யப்பட்ட மானியம் இல்லாத சிலிண்டர் விலை இனி ரூ.734 ஆக உயர்ந்தது. இது இன்று முதல் ரூ.881 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் மட்டும் மானியமில்லாத சிலிண்டர் விலை சுமார் 300 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 

எண்ணை நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரையும், கடைகளுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களையும் வினியோகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com