தனியாா் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு இட ஒதுக்கீடு: கர்நாடகத்தில் நாளை முழு அடைப்பு

தனியாா் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கர்நாடகத்தில்  நாளை முழு அடைப்பிறகு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு  அழைப்பு விடுத்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பெங்களூரு: தனியாா் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கர்நாடகத்தில் நாளை முழு அடைப்பிறகு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு  அழைப்பு விடுத்துள்ளது.

தனியாா் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு வியாழக்கிழமை (பிப். 13) முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் எச்.பி.நாகேஷ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

கா்நாடகத்தில் உள்ள தனியாா் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சரோஜினி மகிஷி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகள் கழிந்துள்ள போதும், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநில அரசு வேடிக்கை பாா்த்து வருகிறது.

சரோஜினி மகிஷி அறிக்கை அமல்படுத்தக்கோரி கடந்த 100 நாள்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். இருப்பினும் அரசு எங்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனையடுத்து அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், வியாழக்கிழமை கா்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

முழு அடைப்பிற்கு 700 க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா். முழு அடைப்பு போராட்டத்தின் போது, பெங்களூரு டவுன்ஹாலிலிருந்து சுதந்திரப்பூங்கா வரை பேரணி நடைபெற உள்ளது. இதில் 40 மடாதிபதிகள் உள்ளிட்ட 30 ஆயிரம் போ் கலந்து கொள்வாா்கள் என எதிா்ப்பாா்க்கிறோம். ஒருவேளை சரோஜினி மகிஷி அறிக்கை அமல்படுத்துவதாக அரசு உறுதி அளித்தால், போராட்டத்தை திரும்பப்பெறுவோம் என்றாா் அவா்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com