தில்லி பாஜக தலைவர் ராஜிநாமாவை ஏற்க கட்சித் தலைமை மறுப்பு?

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததையடுத்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை மனோஜ் திவாரி ராஜிநாமா செய்துள்ளார். ஆனால், அவரது ராஜிநாமாவை ஏற்க கட்சி மறுத்துள்ளதாகத் தெரிகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததையடுத்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பதவியை மனோஜ் திவாரி ராஜிநாமா செய்துள்ளார். ஆனால், அவரது ராஜிநாமாவை ஏற்க கட்சி மறுத்துள்ளதாகத் தெரிகிறது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று மோசமான தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து, இந்தத் தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்பதாக தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி நேற்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தார். இந்நிலையில், தில்லி பாஜக தலைவர் பதவியை அவர் இன்று ராஜிநாமா செய்துள்ளார்.

ஆனால், தகவலறிந்த வட்டாரங்கள் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், மனோஜ் திவாரியின் ராஜிநாமா கடிதத்தை கட்சி ஏற்க மறுத்துள்ளதாகக் கூறினர். மேலும், தில்லி பாஜகவில் அமைப்பு ரீதியிலான மாற்றங்கள் மேற்கொள்ளும்போது, தலைமை மாற்றம் செய்யப்படும் என்று கட்சித் தலைமை மனோஜ் திவாரியிடம் தெரிவித்ததாகவும் கூறினர்.

தில்லி பாஜகவில் ஏற்கெனவே உட்கட்சிப் பூசல் உள்ளது. விஜய் கோயல், மனோஜ் திவாரி மற்றும் ஹர்ஷ் வர்தன் என மூன்று பேருக்கும் தனித்தனி ஆதரவாளர்கள் உள்ளனர். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகவே மனோஜ் திவாரியை தலைமைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கைகள் இருந்த வண்ணம் உள்ளன. ஆனால், தில்லி பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்க அமித் ஷா அப்போது மறுத்துவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com