பிப். 14ம் தேதியை பெற்றோர்கள் தினமாக கொண்டாட வேண்டும்: ஹிந்து அமைப்பு வலியுறுத்தல்

காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியை பெற்றோர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று ஹிந்து ஜனஜாகிருதி சமிதி அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
பிப். 14ம் தேதியை பெற்றோர்கள் தினமாக கொண்டாட வேண்டும்: ஹிந்து அமைப்பு வலியுறுத்தல்

காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதியை பெற்றோர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று ஹிந்து ஜனஜாகிருதி சமிதி அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

கோவா மாநிலத்தில் கலெக்டர் மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கான ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, ஹிந்து ஜனஜாகிருதி சமிதி என்ற அமைப்பு பிப்ரவரி 14ம் தேதியை பெற்றோர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகத்திடமும் கேட்டுக்கொண்டுள்ளது. 

'காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் தேதியை பெற்றோர் தினமாக கொண்டாட வேண்டும் என்று முறையிட்டது. இந்நாள் இந்தியாவில் இளைஞர்களிடையே தேவையில்லாமல் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, தற்போதைய இளம் தலைமுறை ஒழுக்க சீர்கேட்டை நோக்கி ஈர்க்கப்படுகிறது. 

காதலர் தினத்தன்று இளம் பெண்கள் மீது துன்புறுத்துதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. ஆல்கஹால், போதைப்பொருள், புகைப்பிடித்தல் போன்ற முறைகேடுகளும் அதிகரித்து வருகின்றன, மேலும், இந்நாட்களில் கருத்தடை சாதன விற்பனை அதிகரிப்பது ஒழுக்கக்கேடான உறவுகள் அதிகரிப்பதைக் குறிக்கிறது. 

எனவே, பிப்ரவரி 14ம் தேதியை பெற்றோர்கள் தினமாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இளைஞர்கள், பெற்றோரிடம் அதிக அன்பையும், மரியாதையையும் காண்பிப்பார்கள்'

இவ்வாறு ஹிந்து அமைப்பு அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com