ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக அரவிந்த் கேஜரிவால் தேர்வு

ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக அரவிந்த் கேஜரிவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக அரவிந்த் கேஜரிவால் தேர்வு

ஆம் ஆத்மியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக அரவிந்த் கேஜரிவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் முதல்வா் கேஜரிவால் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளார். கடும் போட்டியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 

ஆனால் காங்கிரஸ் கடந்த தேர்தலை போலவே இந்த தோ்தலிலும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தில்லியில் புதிதாக தேர்வாகியுள்ள ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ-க்களின் கூட்டம் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. அதில் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக அரவிந்த் கேஜரிவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். 

இதையடுத்து, ஆளுநர் அணில் பைஜாலை நேரில் சந்தித்து அரவிந்த் கேஜரிவால் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். வரும் 16ம் தேதி அரவிந்த் கேஜரிவால் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். உடன் அமைச்சர்களும் பொறுப்பேற்க உள்ளனர். பதவி ஏற்பு விழா தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com