Enable Javscript for better performance
உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 13th February 2020 03:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    priyanka

    உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

    இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில் உ.பி.யில் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஃபிரோசாபாத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்டார். 

    சீதாபூரில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அரசு என்ன செய்கிறது? பாஜக ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஆனால் அரசு இதற்கு பொறுப்புகூட ஏற்பதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    முன்னதாக செவ்வாய்க்கிழமை உ.பி., முதல்வர் யோகி ஆத்தியநாத் கூறுகையில், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக அரசு 218 விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai