தகிக்கும் வெப்பம்: தொழிலாளர்களுக்கு 3 மணி நேரம் இடைவேளை கொடுக்கும் கேரள அரசு

கேரள மாநிலத்தில் பகல் வேளையில் தகிக்கும் வெப்பம் காரணமாக, பொது வெளியில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் வகையில் 3 மணி நேரம் இடைவேளை கொடுக்கும் முடிவை கேரள அரசு எடுத்துள்ளது.

இது குறித்து கேரள தொழிலாளர் துறை ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, வெட்டவெளியில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களது பணி நேரத்தை காலை 7 மணி முதல் இரவு 7 மணியாகவும், 8 மணி நேரம் பணி நேரமாகவும் கணக்கிடும்படியும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரை இடைவேளை விடும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெட்ட வெளியில், சூரிய வெளிச்சத்தில் நேரடியாக பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இந்த பணி நேரம் பொருந்தும். தகிக்கும் வெப்பத்தால் தொழிலாளர்களுக்கு எந்த உடல்நல பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 30ம் தேதி வரை நீடிக்கும் என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, கோடை வெப்பத்தில் இருந்து தொழிலாளர்களைக் காக்கும்வகையில் கேரள அரசு இந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com