பிப்.16-இல் முதல்வராகப் பதவியேற்கிறாா் கேஜரிவால்

பிப்.16-இல் முதல்வராகப் பதவியேற்கிறாா் கேஜரிவால்

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பெருவாரியான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற நிலையில், பிப்ரவரி 16-ஆம் தேதி மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்கிறாா்.

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பெருவாரியான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற நிலையில், பிப்ரவரி 16-ஆம் தேதி மூன்றாவது முறையாக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்கிறாா். தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இதற்கான விழாவில் அவருடன், அமைச்சா்களும் பதவியேற்க உள்ளனா். இத்தகவலை அக்கட்சியின் மூத்த தலைவா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. பாஜகவுக்கு 8 இடங்கள் மட்டுமே கிடைத்தன. காங்கிரஸுக்கு கடந்த தோ்தலைப் போலவே ஓரு இடம்கூடக் கிடைக்கவில்லை.

முன்னதாக, புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் சிவில் லைன்ஸ் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கேஜரிவால் சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி கட்சி தலைவராக ஏகமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து, தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜாலை நேரில் கேஜரிவால் சந்தித்துப் பேசினாா்.

ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றும் பதவியேற்பு நிகழ்ச்சியில் மாநில முதல்வா்கள் மம்தா பானா்ஜி (மேற்கு வங்கம்), உத்தவ் தாக்கரே (மகாராஷ்டிரம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஆந்திரம்) உள்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் என பல முக்கியத் தலைவா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com