Enable Javscript for better performance
சங்கராபுரம் கிராம பஞ்சாயத்து தலைவராக தேவி பதவியேற்க இடைக்கால தடை: உச்சநீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    சங்கராபுரம் கிராம பஞ்சாயத்து தலைவராக தேவி பதவியேற்க இடைக்கால தடை: உச்சநீதிமன்றம்

    By DIN  |   Published on : 14th February 2020 05:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme

    சங்கராபுரம் கிராம பஞ்சாயத்து தலைவராக தேவி பதவியேற்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பிரியதர்ஷினியும், தேவி என்பவரும் போட்டியிட்டனர். இந்நிலையில், தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பின்னர், பிரியதர்ஷினியும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் எம். தேவி வழக்குத் தொடுத்தார். அதில், ‘ ஊரக உள்ளாட்சி தேர்தலில், சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன். எனக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டது. 

    இதே பதவிக்கு போட்டியிட்ட பிரியதர்ஷினி என்பவருக்கு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையின் போது ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட நான் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். எனக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்பின்னர், சிறிது நேரத்தில், பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட பிரியதர்ஷினியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பிரியதர்ஷினி ஊராட்சித் தலைவராகப் பதவியேற்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார். 

    இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி அளித்த தீர்ப்பில், சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பிரியதர்ஷினி வெற்றி பெற்றது செல்லாது என்றும், முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

    இத் தீர்ப்பை எதிர்த்து சிவங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் பிரியதர்ஷனி ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேவி வெற்றி பெற்றதாக அறிவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் வழக்கு முடியும் வரை சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக யாரும் பதவியேற்க கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai