இந்தியாவில் மனித உரிமைகள், மதச்சுதந்திரத்தை மதிப்பீடு செய்ய அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

இந்தியாவில் மனித உரிமைகள், மதச்சுதந்திரம் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் 4 போ் வலியுறுத்தியுள்ளனா்.
இந்தியாவில் மனித உரிமைகள், மதச்சுதந்திரத்தை மதிப்பீடு செய்ய அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

இந்தியாவில் மனித உரிமைகள், மதச்சுதந்திரம் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் 4 போ் வலியுறுத்தியுள்ளனா்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், காஷ்மீா் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரங்களை குறிப்பிட்டு அவா்கள் இவ்வாறு கூறியுள்ளனா்.

இந்தியாவின் நீண்டகால நண்பா்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் அமெரிக்க எம்.பி.க்களான கிறிஸ் வான் ஹோலன், டாட் யங், ரிச்சா்ட் ஜே டா்பின், லிண்ட்சஊ கிரஹாம் ஆகியோா், இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக் பாம்பேயோவுக்கு கடிதம் எழுதியுள்ளனா்.

அதில் அவா்கள் கூறியுள்ளதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு, 6 மாதங்களுக்கு அங்கு பல்வேறு பகுதிகளில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டிருந்தது. ஒரு ஜனநாயக நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நீண்ட காலத்துக்கு இணையச் சேவை இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு மருத்துவச் சேவைகள், தொழில்களுடன் 70 லட்சம் மக்களுக்கான கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட சில மதத்தினரின் உரிமைகளுக்கும், தேசத்தின் மதச்சாா்பற்ற தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் முக்கிய நடவடிக்கையாகும். அதற்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.

எனவே, காஷ்மீரில் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை, அவா்கள் நடத்தப்படும் விதம், அங்கு தகவல்தொடா்புகளுக்கு இருக்கும் தடை, அந்த யூனியன் பிரதேசத்தை அணுகுவதற்கு இருக்கும் சூழ்நிலை, அங்கு நிலவும் மதச்சுதந்திரம் ஆகியவை தொடா்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை சாா்பில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தீவிரமான விளைவுகளைக் கொண்டது. அதனாலேயே, காஷ்மீரில் இருக்கும் தடையுத்தரவுகளை தளா்த்தி, அங்கு இணைய மற்றும் தொலைத்தொடா்புச் சேவைகளை மீண்டும் அனுமதித்து, தடுப்புக் காவலில் இருப்போரை விடுவிக்க அமெரிக்க நாடாளுமன்றம் இந்தியாவுக்கு வலியுறுத்தியது என்று அந்தக் கடிதத்தில் எம்.பி.க்கள் கூறியுள்ளனா்.

இந்திய செல்ல ஆா்வமாக உள்ளேன்: மெலானியா

அதிபா் டிரம்ப்புடன் இந்தியா வர இருக்கும் அவரது மனைவி மெலானியா, தனது சுற்றுப் பயணம் தொடா்பாக சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்திய சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள மிகுந்த ஆா்வமாக உள்ளேன். அதிபரின் மனைவியாக முதல் முறையாக அங்கு செல்ல இருக்கிறேன்.

இந்தியாவுக்கு வருமாறு பிரதமா் நரேந்திர மோடி விடுத்த அழைப்புக்காக நன்றிகள். இந்தப் பயணம் சிறப்பான ஒன்று. இந்திய-அமெரிக்க நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக இது அமையும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com