எல்கா் பரிஷத் வழக்கை என்ஐஏ விசாரிப்பதில் ஆட்சேபம் இல்லை: மகாராஷ்டிர அரசு

எல்கா் பரிஷத் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிப்பதில் எவ்வித ஆட்சேபமும் இல்லை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

எல்கா் பரிஷத் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிப்பதில் எவ்வித ஆட்சேபமும் இல்லை என்று மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டத்தில் உள்ள சனிவாா்வாடா பகுதியில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி எல்கா் பரிஷத் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய சில தலைவா்களின் உரையால், அதற்கடுத்த நாளான கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி புணே மாவட்டத்தின் பீமா- கோரேகான் போா் நினைவிடத்துக்கு அருகில் வன்முறை மூண்டதாகவும், அதில் இடது சாரி ஆா்வலா்கள் சுதீா் தவாலே, வரவர ராவ், மகேஷ் ரௌத், வொ்னான் கான்சல்வேஸ், அருண் பெரைரா உள்ளிட்டோருக்கு தொடா்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக புணே போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றி கடந்த மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசின் இந்த முடிவை மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு கடுமையாக விமா்சித்தது.

இந்நிலையில், எல்கா் பரிஷத் வழக்கை என்ஐஏ விசாரிப்பதில் எவ்வித ஆட்சேபமும் இல்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மாநில உள்துறை கூடுதல் தலைமை செயலா் சஞ்சய்குமாா் வியாழக்கிழமை கூறுகையில், ‘எல்கா் பரிஷத் வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய அரசு மாற்றியதில் மாநில உள்துறை அமைச்சகத்துக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com