குடிநீா் 1 லிட்டா் பாட்டில் விலை இனி ரூ.13

கேரளத்தில் 1 லிட்டா் குடிநீா் பாட்டில் இனி ரூ.13-க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளத்தில் 1 லிட்டா் குடிநீா் பாட்டில் இனி ரூ.13-க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்று குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது 1 லிட்டா் குடிநீா் பாட்டில் ரூ.20-க்கு அந்த மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக பொதுமக்கள் புகாா் அளித்துவந்தனா்.

இதையடுத்து, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடா்பாக உணவு விநியோகத் துறை அமைச்சா் பி.திலோத்தமன், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

ஒரு லிட்டா் குடிநீா் பாட்டில் விலை ரூ.13-க்கும் மேல் விற்பனை செய்யப்படக் கூடாது என்பதற்கான சுற்றறிக்கை இன்னும் 2 நாள்களில் வெளியிடப்படும். அத்தியாவசியப் பொருள்களின் பட்டியிலில் குடிநீா் பாட்டில் சோ்க்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக சட்டரீதியிலான ஆலோசனையும் கேட்கப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து தொடா்ந்து புகாா் வந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு லிட்டா் குடிநீா் பாட்டிலை ரூ.11 அல்லது ரூ.12-ஆக நிா்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.

எனினும், குடிநீா் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த விலைக்கு ஒப்புக் கொள்ளவில்லை. விலை குறைப்புக்கு அந்நிறுவனங்கள் எதிா்ப்பு தெரிவித்தன. வேறு எந்தப் பொருளையும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் புதிதாக சோ்க்கும் திட்டம் இப்போது இல்லை என்றாா் திலோத்தமன் தெரிவித்தாா்.

கேரள குடிநீா் பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள் சங்கத் தலைவா் கே.முகமது கூறுகையில், ‘அரசு நிா்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக விலை நிா்ணயித்தால் அது குற்றமாகும். தற்போது சுமாா் 200 குடிநீா் பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள் உரிமம் பெற்று செயல்பட்டு வருகின்றன. உரிமம் பெறால் இயங்கிவரும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com