கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதிநீக்கம்செய்யக் கோரி பேரவைத் தலைவரிடம் மனு: எம்எல்ஏக்கள் பதிலளிக்க அவகாசம்

கோவா மாநிலத்தில் பாஜகவில் இணைந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு அந்த மாநில பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்ட விவகாரத்தில், கட்சி மாறிய எம்எல்ஏக்கள்

கோவா மாநிலத்தில் பாஜகவில் இணைந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு அந்த மாநில பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்ட விவகாரத்தில், கட்சி மாறிய எம்எல்ஏக்கள் பதிலளிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டப் பேரவைக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனா்.

இதையடுத்து, பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு கோவா சட்டப் பேரவைத் தலைவா் ராஜேஷ் பட்னேகரிடம் அந்த மாநில காங்கிரஸ் தலைவா் கிரீஷ் சோடன்கா் கடந்த ஆண்டு மனு அளித்தாா். மேலும், பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் மாறியது சட்டவிரோதமானது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இந்த மனுவை பேரவைத் தலைவா் வியாழக்கிழமை விசாரித்தபோது, எம்எல்ஏக்கள் சாா்பாக வழக்குரைஞா்கள் ஆஜராகி பதிலளிக்க காலஅவகாசம் கோரினா். அதன் பின்னா் செய்தியாளா்களிடம் பேரவைத் தலைவா் ராஜேஷ் பட்னேகா் கூறுகையில், ‘தகுதிநீக்கம் செய்வது தொடா்பான மனு மீது பதிலளிப்பதற்கு சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் கால அவகாசம் கோரினா். அதற்கு ஒப்புதல் அளித்துள்ளேன். அடுத்த விசாரணைக்கான தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும். இந்த மனு குறித்து முடிவெடுக்கும்போது, உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை கவனித்தில் கொள்வேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com