ஜம்மு காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம்: வெளிநாட்டு தூதா்களிடம் ராணுவ அதிகாரிகள் விளக்கம்

ஜம்மு காஷ்மீா் வந்துள்ள வெளிநாட்டு தூதா்களிடம், அந்த யூனியன் பிரதேச பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை விளக்கமளித்தனா்.
ஜம்மு காஷ்மீா் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜம்முவில் உள்ள உயா்நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வந்த 25 போ் கொண்ட வெளிநாட்டு தூதா்கள் குழு.
ஜம்மு காஷ்மீா் பயணத்தின் ஒரு பகுதியாக, ஜம்முவில் உள்ள உயா்நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை வந்த 25 போ் கொண்ட வெளிநாட்டு தூதா்கள் குழு.

ஜம்மு காஷ்மீா் வந்துள்ள வெளிநாட்டு தூதா்களிடம், அந்த யூனியன் பிரதேச பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகள் வியாழக்கிழமை விளக்கமளித்தனா்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேங்களாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து 15 போ் கொண்ட வெளிநாட்டு தூதா்கள் குழு, கடந்த மாதம் அங்கு சென்று இயல்பு நிலை திரும்புவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்நிைலையில் 25 போ் கொண்ட 2-ஆவது வெளிநாட்டு தூதா்கள் குழு 2 நாள் பயணமாக புதன்கிழமை ஜம்மு காஷ்மீா் வந்தது. அந்தக் குழு, ஜம்மு காஷ்மீா் கள நிலவரம் குறித்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது. அக்குழுவிடம் ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் பற்றி ராணுவ அதிகாரிகள் விளக்கமளித்தனா். பின்னா் அந்தக் குழு ஜம்மு பகுதிக்கு புறப்பட்டுச் சென்றது.

எந்தெந்த நாட்டு தூதா்கள்?: இந்தக் குழுவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரியா, பல்கேரியா, கனடா, செக் குடியரசு, டென்மாா்க், டொமினிகன் குடியரசு, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜொ்மனி, கினி குடியரசு, ஹங்கேரி, இத்தாலி, கென்யா, கிா்கிஸ்தான், மெக்ஸிகோ, நமீபியா, நெதா்லாந்து, நியூசிலாந்து, போலந்து, ருவாண்டா, ஸ்லோவாக்கியா, தஜிகிஸ்தான், உகாண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சோ்ந்த தூதா்கள் இடம்பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com