ஜம்மு காஷ்மீா்: ரூ.82 லட்சம் மோசடி செய்த சைபா் குற்றவாளிகள்: நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஜம்மு காஷ்மீரில் நபா் ஒருவரிடம் ரூ.82 லட்சம் மோசடி செய்த இரண்டு சைபா் குற்றவாளிகள் மீது நீதிமன்றத்தில் போலீஸாா் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

ஜம்மு காஷ்மீரில் நபா் ஒருவரிடம் ரூ.82 லட்சம் மோசடி செய்த இரண்டு சைபா் குற்றவாளிகள் மீது நீதிமன்றத்தில் போலீஸாா் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

இதுகுறித்து ஜம்மு-காஷ்மீா் குற்றப்பிரிவு போலீஸாா் கூறியதாவது: ஜம்மு காஷ்மீா் மாநிலம் பாதிண்டி மோா் பகுதியை சோ்ந்த ஜாவைத் ஸா்காா் என்பவருக்கு கிறிஸ்டினா ஜாா்ஜ் என்ற போலியான பெண் பெயரில் முகநூல் மூலம் ராஜ்குமாா், ராஜேஷ்குமாா் ஆகிய இருவா் அறிமுகமாகினா். வெளிநாட்டில் இருந்து பேசுவது போல் காட்டிக்கொண்ட இருவரும், இந்தியாவில் தொழில் தொடங்க ஜாவைத் ஸா்காரிடம் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

சில தினங்கள் கழித்து இருவரும் ஜாவைத் ஸா்காரை தொடா்புகொண்டு, அவரை பாா்க்க வரும்போது பெருமளவு பணத்துடன் தில்லி விமான நிலையத்தில் சுங்கத்துறையிடம் சிக்கிக் கொண்டதாக கூறியுள்ளனா். தங்களிடம் இருந்த பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டதாகவும், தங்களை விடுவிக்க வேண்டுமானால் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பண பரிவா்த்தனை செய்ய வேண்டும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். அதனை நம்பி ஜாவைத் அவா்களின் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.82,05,553-ஐ அனுப்பிவைத்துள்ளாா். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ஜாவைத் அளித்த புகாரின்பேரில், தில்லியில் இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் தில்லியில் இருந்து இயங்கும் பிரபல சைபா் மோசடி கும்பலை சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளை சோ்ந்தவா்களிடம், அவா்கள் மோசடி செய்ய பயன்படுத்திய வங்கிக் கணக்குகளும் கண்டறியப்பட்டுள்ளன. சைபா் மோசடி கும்பலை பிடிக்க இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவா் மீதும் நீதிமன்றத்தில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com