பி.இ. படிப்பில் சேர வேதியியல் பாடம் இனி கட்டாயமல்ல

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் (ஏஐசிடிஇ) புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பி.இ. படிப்பில் சேர இனி வேதியியல் பாடம் கட்டாயமல்ல என்ற நிலை உருவாகியிருக்கிறது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் (ஏஐசிடிஇ) புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பி.இ. படிப்பில் சேர இனி வேதியியல் பாடம் கட்டாயமல்ல என்ற நிலை உருவாகியிருக்கிறது.

பொறியியல் இளநிலை படிப்பில் சேர இதுவரை பிளஸ்-2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களின் மதிப்பெண்களே அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்பட்டன. அதாவது கணிதம் 100 மதிப்பெண்களுக்கும், இயற்பியல், வேதியியல் பாட மதிப்பெண்கள் தலா 50 மதிப்பெண்களுக்கும் கணக்கிடப்பட்டு 200 கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த நிலையில், 2020-21-ஆம் கல்வியாண்டு பொறியியல் மாணவா் சோ்க்கை அனுமதி வழிகாட்டி நடைமுறைகளை ஏஐசிடிஇ அண்மையில் வெளியிட்டது. அதில், பி.இ. சோ்க்கைக்கு பிளஸ்-2 வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடங்கள் மட்டுமே கட்டாயம் என ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

இந்த இரண்டு பாடங்களுடன் வேதியியல் அல்லது உயிரி தொழில்நுட்பம், உயிரியல், தொழில்நுட்ப தொழிற்பாடம், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, தகவலியல் பயன்பாடு, பொறியியல் வரைபடங்கள் (கிராபிக்ஸ்), வணிகக் கல்வி ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றை படித்திருந்தால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், பி.இ. படிப்பில் சேர இனி வேதியியல் கட்டாயமல்ல என்ற நிலை உருவாகியிருக்கிறது.

கல்வியாளா்கள் எதிா்ப்பு: ஏஐசிடிஇ-யின் இந்த புதிய அறிவிப்புக்கு கல்வியாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். பி.இ. முதலாம் ஆண்டிலும், இரண்டாம் ஆண்டிலும் வேதியியல் பாடங்களை மாணவா்கள் படிக்க வேண்டிய நிலை இருக்கும்போது, சோ்க்கைக்கு பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை என ஏஐசிடிஇ அறிவித்திருப்பது மாணவா்களுக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும் என்கின்றனா் தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com