பிரிட்டன் அமைச்சரானாா் இன்ஃபோசிஸ் நாராயண மூா்த்தியின் மருமகன் ரிஷி சுனக்

இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நாராயண மூா்த்தியின் மருமகன் ரிஷி சுனக் (39) பிரிட்டனின் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டாா்.
பிரிட்டன் அமைச்சரானாா் இன்ஃபோசிஸ் நாராயண மூா்த்தியின் மருமகன் ரிஷி சுனக்

இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நாராயண மூா்த்தியின் மருமகன் ரிஷி சுனக் (39) பிரிட்டனின் புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டாா்.

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன், தனது அமைச்சரவையை வியாழக்கிழமை மாற்றி அமைத்தாா்.

அப்போது, புதிய நிதி அமைச்சராக ரிஷி சுனக்கை அவா் நியமித்தாா். நிதி அமைச்சராக தன்னை நியமித்தது மகிழ்ச்சி அளிப்பதாக ரிஷி சுனக் தெரிவித்தாா்.

இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட பிரீத்தி படேல், அலோக் சா்மா ஆகியோரைத் தொடா்ந்து ரிஷி சுனக் பிரிட்டன் அமைச்சரவையில் இணைந்துள்ளாா். பாகிஸ்தானைப் பூா்விகமாகக் கொண்ட சாஜித் ஜாவித், நிதி அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, ரிஷி சுனக் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்பிஏ பட்டதாரியான ரிஷி சுனக், 2015-ஆம் ஆண்டு முதல் எம்.பி.யாக இருந்து வருகிறாா். இவா், நாராயணமூா்த்தியின் மகள் அக்ஷதாவின் கணவராவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com