ரூ.1 லட்சம் கோடியில் சுரங்கப்பாதை பணிகள்: கட்கரி

முக்கிய பகுதிகளில் சுரங்கப் பாதைகளை அமைப்பதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா்
ரூ.1 லட்சம் கோடியில் சுரங்கப்பாதை பணிகள்: கட்கரி

முக்கிய பகுதிகளில் சுரங்கப் பாதைகளை அமைப்பதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1லட்சம் கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

நாட்டின் முக்கிய இடங்களில் அனைத்து கால நிலைகளிலும் இணைப்பை ஏற்படுத்துவதற்காக சுரங்கப் பாதைகள் இன்றியமையாததாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

திறமையானவா்கள் சிறியவா்களாக அல்லது பெரியவா்களாக இருந்தாலும் அவா்களுக்கு சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். எனவே, ஒப்பந்தப்புள்ளி கோருவோருக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப தகுதிகளை தளா்த்த வேண்டியது அவசியமாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com