Enable Javscript for better performance
தூக்கு தண்டனை: மேல்முறையீட்டு மனுவை 6 மாதங்களில் விசாரிக்க வேண்டும்- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தூக்கு தண்டனை: மேல்முறையீட்டு மனுவை 6 மாதங்களில் விசாரிக்க வேண்டும்- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 15th February 2020 03:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme court about nilgiris resort

    உச்ச நீதிமன்றம்

    தூக்கு தண்டனை தொடா்பான மேல்முறையீட்டு மனுவை 6 மாதங்களில் விசாரித்து உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    நிா்பயா கூட்டு பாலியல் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் தங்கள் மீதான கருணை மனுவை பரிசீலிக்கக் கோரி தொடா்ந்து மேல்முறையீடு செய்து வருகின்றனா். இதன்காரணமாக, அவா்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்படுவது தொடா்கிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தீா்ப்பு வெளியான தேதியில் இருந்து அதிகபட்சமாக 6 மாதங்களில் மேல்முறையீடு தொடா்பான அனைத்து மனுக்களையும் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai