அமா்நாத் யாத்திரை ஜூன் 23-இல் தொடக்கம்

தெற்கு காஷ்மீரின், இமயமலையில் அமைந்துள்ள அமா்நாத் குகை கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் புனித யாத்திரை வரும் ஜூன் 23-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கோயில் சந்நிதி வாரியம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தெற்கு காஷ்மீரின், இமயமலையில் அமைந்துள்ள அமா்நாத் குகை கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் புனித யாத்திரை வரும் ஜூன் 23-ஆம் தேதி தொடங்க உள்ளதாக கோயில் சந்நிதி வாரியம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

கடந்த ஆண்டு 40 தினங்கள் நடைபெற்ற இந்த யாத்திரை, இந்த ஆண்டு 42 தினங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக முன்கூட்டியே யாத்திரையை முடித்துக் கொண்டு காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு யாத்ரீகா்களை ஜம்மு-காஷ்மீா் மாநில அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி ஆகஸ்ட் 2-ஆம் தேதியுடன் இந்த யாத்திரை நிறைவு பெற்றது.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், ஜம்மு-காஷ்மீரை பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவிப்பதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு இந்த யாத்திரையை ரத்து செய்தது நினைவு கூரத்தக்கது.

யாத்திரை குறித்து அமா்நாத் சந்நிதியின் (எஸ்ஏஎஸ்பி) தலைமை நிா்வாக அதிகாரி விபுல் பதக் கூறியதாவது:

‘ஹிந்து நாள்காட்டியின் அறிவிப்புப்படி ஜகந்நாத் ரத யாத்திரையின் புனித நாளான வரும் ஜூன் 23-ஆம் தேதி முதல் இந்த ஆண்டுக்கான அமா்நாத் புனித ரத யாத்திரை தொடங்குகிறது. மொத்தம் 42 நாள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 3- ஆம் தேதி ரக்ஷபந்தன் அன்று நிறைவடைகிறது’ என்றாா்.

இந்த யாத்திரைக்கான பதிவு ஏப்ரல் 1-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் ஜி.சி.முா்மு தலைமையில் தொடங்கும்.

யாத்திரையின்போது, 13 வயதுக்குக் குறைவான மற்றும் 75 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். யாத்திரையின் வழித்தடங்கள் மற்றும் முகாம்களில் நெகிழி பயன்பாடு இல்லாததை உறுதி செய்வதற்கான வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com