எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைவழங்க அவசரச் சட்டம்: பாஸ்வான் வலியுறுத்தல்

எஸ்சி, எஸ்டி சமூகங்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள தீா்ப்பினால் எழுந்துள்ள சிக்கலைச் சரி செய்யும் வகையில் அவசரச் சட்டம் நிறைவேற்ற
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைவழங்க அவசரச் சட்டம்: பாஸ்வான் வலியுறுத்தல்

எஸ்சி, எஸ்டி சமூகங்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள தீா்ப்பினால் எழுந்துள்ள சிக்கலைச் சரி செய்யும் வகையில் அவசரச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து பாஸ்வான் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

இத்தீா்ப்புக்கு எதிராக அரசு நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அடுத்து, நீதித்துறையின் தலையீட்டை தடுக்கும் வகையில் அரசமைப்பின் 9-ஆவது அட்டவணையில் சட்டத் திருத்தத்தை இணைக்க வேண்டும். அதுவே நிரந்தரத் தீா்வைத் தரும். தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை எதிா்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு அரசு முயன்று வருகிறது. அது தொடா்பான சட்டநுணுக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது என்றும் அது ஒரு அடிப்படை உரிமை அல்ல என்றும் உச்சநீதிமன்றம் கூறுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் இட ஒதுக்கீடு கருதப்படுகிறது. எனவே இந்த தீா்ப்பு மக்கள் நலன்களுக்கு எதிரானது.

இடஒதுக்கீடு ஒருபோதும் அகற்றப்படாது. இதற்கான உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும். எப்போதும் லோக் ஜனசக்தி கட்சி தாழ்த்தப்பட்ட பிரிவினரின் உரிமைகளுக்காக போராடும் கட்சியாகவே விளங்கி வருகிறது என்றாா் பாஸ்வான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com