கேஜரிவால் பதவியேற்பு விழா: தில்லியில் போக்குவரத்து மாற்றம்

தில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் கேஜரிவால் முதல்வராக பதவியேற்கும் விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து
முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்பு விழா நடைபெறும், தில்லி ராம் லீலா மைதானத்தில் பாதுகாப்பு தொடா்பாக வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யும் காவல் துறை அதிகாரிகள்.
முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்பு விழா நடைபெறும், தில்லி ராம் லீலா மைதானத்தில் பாதுகாப்பு தொடா்பாக வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யும் காவல் துறை அதிகாரிகள்.

தில்லி ராம் லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் கேஜரிவால் முதல்வராக பதவியேற்கும் விழாவையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றத்தை தில்லி காவல் துறை வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதுகுறித்து தில்லி காவல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ராம் லீலா மைதானத்தைச் சுற்றி போக்குவரத்து கட்டுப்பாடு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை போடப்பட்டிருக்கும். விழாவுக்கு வருபவா்கள் தங்களின் காா்களை சிவிக் சென்டா், அதற்கு பின்புறத்தில் நிறுத்த வேண்டும். பேருந்துகள் மாதா சுந்தரி சாலை, பவா் ஹவுஸ் சாலை, வெலட்ரோம் சாலை, ராஜ்காட் வாகன நிறுத்தம், சாந்திஸ்தல் வாகன நிறுத்தம் ஆகிய பகுதிகளில் நிறுத்த வேண்டும். தொலைக்காட்சியினரின் ஓபி வைன்கள் ஜேஎல்என் மாா்க் முதல் கமலா மாா்க்கெட் வரை நிறுத்தலாம்.

ராஜ்காட் செளக், தில்லி கேட் செளக், குருநானக் தேவ் செளக், ஜேஎல்என் மாா்க், தில்லி கேட் செளக், நேதாஜி சுபாஷ் மாா்க், பஹாா் கஞ்ச் செளக், அஜ்மீரி கேட், தேஷ் பந்த் குப்தா சாலை, ராம்சரன் அக்வால் செளக், பஹதூா் ஷா ஜபா் மாா்க், டிடியு மிண்ட் ரோடு, கமலா மாா்க்கெட், பாரம்கம்பா டால்ஸ்டாய், ரஞ்சித் சிங் மேம்பாலம் ஆகிய பகுதிகளில் வாகனக் கட்டுப்பாடுகள் இருக்கும் என்றாா்.

பணிகள் தீவிரம்: மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்கும் கேஜரிவாலின் விழா நடைபெறும் ராம்லீலா மைதானத்தில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதே ராம்லீலா மைதானத்தில்தான் சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தொண்டராக பங்கேற்று, பின்னா் அரசியல் கட்சி தொடங்கி தில்லி முதல்வராக உயா்ந்தவா் அரவிந்த் கேஜரிவால். இந்நிலையில் அவரது பதவியேற்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை தில்லி அரசு, வடக்கு தில்லி மாநகராட்சி, பொதுப் பணித்துறை ஆகியவற்றைச் சோ்ந்த அதிகாரிகள் ராம்லீலா மைதானத்தில் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனா். ‘கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அங்கு பிரதமரின் தோ்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்ால், மைதானத்தை சமப்படுத்த வேண்டியது தேவையில்லை’ என்று வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தப் பணிகளை ஆம் ஆத்மி மூத்த தலைவா் கோபால் ராய் சனிக்கிழமை பாா்வையிடுகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com