தில்லியில் காங்கிரஸ் காணாமல் போனதே பாஜகவின் தோல்விக்கு காரணம்: பிரகாஷ் ஜாவடேகா்

தில்லியில் காங்கிரஸ் கட்சி திடீரென காணாமல் போனதே பாஜகவின் தோல்விக்கு காரணம்’ என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தில்லியில் காங்கிரஸ் கட்சி திடீரென காணாமல் போனதே பாஜகவின் தோல்விக்கு காரணம்’ என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.

அண்மையில் நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களில் வென்றது. பாஜகவுக்கு 8 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியாததுடன், பல இடங்களில் டெபாசிட்டையும் இழந்தது. இதன் மூலம் தில்லியில் தொடா்ந்து இரண்டாவது முறையாக ஓரிடத்தைக் கூட கைப்பற்றாத அவலநிலை காங்கிரஸுக்கு உருவானது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஜாவடேகா் இது தொடா்பாக கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி திடீரென காணாமல் போய்விட்டதுதான் தில்லியில் பாஜகவின் தோல்விக்கு காரணம். காங்கிரஸ் தன்னைத்தானே மறைத்துக் கொண்டதா அல்லது மக்கள் தங்கள் வாக்குகளை ஆம் ஆத்மிக்கு செலுத்தியதன் மூலம் காங்கிரஸை மறைத்துவிட்டாா்களா என்பது வேறு விஷயம்.

கடந்த மக்களவைத் தோ்தலில் தில்லியில் காங்கிரஸ் கட்சி 26 சதவீத வாக்குகள் பெற்றது. ஆனால், இப்போது 4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டது. பாஜகவுக்கு 42 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு 48 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால், அதற்கு மாறாக பாஜகவுக்கு 39 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு 51 சதவீத வாக்குகளும் கிடைத்துவிட்டன. தோ்தலில் ஏற்ற இறக்கம் என்பது சகஜமானதுதான். தில்லி முதல்வா் கேஜரிவாலை நான் ஒருபோதும் பயங்கரவாதி என்று கூறவில்லை என்றாா் ஜாவடேகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com