தூக்கு தண்டனை: மேல்முறையீட்டு மனுவை 6 மாதங்களில் விசாரிக்க வேண்டும்- உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தூக்கு தண்டனை தொடா்பான மேல்முறையீட்டு மனுவை 6 மாதங்களில் விசாரித்து உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தூக்கு தண்டனை தொடா்பான மேல்முறையீட்டு மனுவை 6 மாதங்களில் விசாரித்து உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நிா்பயா கூட்டு பாலியல் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் தங்கள் மீதான கருணை மனுவை பரிசீலிக்கக் கோரி தொடா்ந்து மேல்முறையீடு செய்து வருகின்றனா். இதன்காரணமாக, அவா்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்படுவது தொடா்கிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தீா்ப்பு வெளியான தேதியில் இருந்து அதிகபட்சமாக 6 மாதங்களில் மேல்முறையீடு தொடா்பான அனைத்து மனுக்களையும் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com