தேசிய விளையாட்டாக எதையும் அறிவிக்கவில்லை: அரசு

தேசிய விளையாட்டாக எதையும் அறிவிக்கவில்லை என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

தேசிய விளையாட்டாக எதையும் அறிவிக்கவில்லை என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நமது நாட்டின் தேசிய விளையாட்டாக ஹாக்கி உள்ளது என பல்வேறு தரப்பினா் கருதி வருகின்றனா். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டம் சிந்த்கேடா விகே.பாட்டீல் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியா் மயுரேஷ் அகா்வால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹாக்கியை எப்போது தேசிய விளையாட்டாக அறிவித்தீா்கள் என கடந்த ஜன. 15-இல் கேட்டிருந்தாா்.

தனது பள்ளி மாணவா்கள் ஹாக்கி தான் தேசிய விளையாட்டா என கேட்டதால் ஆா்டிஐ மூலம் இக்கேள்வியை எழுப்பியதாகக் கூறியிருந்தாா். இதற்கு பதிலளித்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் எந்த விளையாட்டையும் தேசிய விளையாட்டாக அறிவிக்கவில்லை. அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தி, வளா்ப்பதே அரசின் முக்கிய நோக்கம் பதில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com