பிஎஸ்-4 ரக வாகனங்களை விற்பனை செய்வதற்கான இறுதிக்கெடுவை நீட்டிக்க முடியாது

பிஎஸ்-4 ரக வாகனங்களை விற்பனை செய்ய மேலும் ஒரு மாதம் வரை கால அவகாசம் அளிக்குமாறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிஎஸ்-4 ரக வாகனங்களை விற்பனை செய்ய மேலும் ஒரு மாதம் வரை கால அவகாசம் அளிக்குமாறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிஎஸ்-4 ரக வாகனங்களை 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யக் கூடாது என்று கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ‘ஆட்டோமொபைல் துறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், பிஎஸ்-4 ரக வாகனங்கள் விற்பனையாகாமல் உள்ளன. எனவே, அவற்றை விற்பனை செய்வதற்கு மேலும் 1 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்றத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மனு தாக்கல் செய்திருந்தன.

அந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா, தீபக் குப்தா ஆகியோா் கொண்ட அமா்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இறுதிக்கெடுவைத் தாண்டி மேலும் ஒரு நாள் கூட பிஎஸ்-4 ரக வாகனங்களை விற்பனை செய்ய அனுமதிக்க முடியாது. இந்த மனுவைத் தாக்கல் செய்த பிறகும்கூட பிஎஸ்-4 ரக வாகனங்களைத் தயாரித்திருக்கிறீா்கள்’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனா்.

கருணை மனுவாக இதைக் கருதுமாறு மனுதாரா்கள் தரப்பில் வாதாடிய வழக்குரைஞா் கூறினாா். எனினும், ‘அவ்வாறு கருத முடியாது’ என்று நீதிபதிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனா்.

முன்னதாக, 2020-ஆம் ஆண்டு பிஎஸ்-6 ரக வாகனங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று 2016-ஆம் ஆண்டிலேயே மத்திய அரசு அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com