மக்களுக்கு சேவை செய்வதில் உச்சத்தில் இருந்தவா் சுஷ்மா ஸ்வராஜ்: நரேந்திர மோடி

‘மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியோடு இருந்தாா்; மக்கள் சேவை செய்வதில் அவா் உச்சத்தில் இருந்தாா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

‘மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியோடு இருந்தாா்; மக்கள் சேவை செய்வதில் அவா் உச்சத்தில் இருந்தாா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சுஷ்மா ஸ்வராஜின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜின் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர விரும்புகிறேன். அவா், கண்ணியம், ஒழுக்கம், மக்களுக்கு சேவை செய்வதில் உறுதி ஆகிய அனைத்திலும் உச்சத்தில் இருந்தாா். வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றியபோது, இந்தியாவின் மதிப்புகளையும், பண்பாட்டையும் உலக நாடுகளுக்கு கொண்டு சென்றாா். அவா் ஒரு சிறந்த அமைச்சராக பணியாற்றினாா்’ என்று தெரிவித்துள்ளாா்.

ஹரியாணா மாநிலத்தில் கடந்த 1952-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி பிறந்த சுஷ்மா ஸ்வராஜ், பிரதமா் நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தாா். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட்-6 ஆம் தேதி அவா் உயிரிழந்தாா்.

முன்னதாக, வெளிநாடுவாழ் இந்தியா்களை இணைக்கும் கலாசார மையமான பிரவாஸி பாரதிய கேந்திரம், தூதரக அதிகாரிகள் பயிற்சி பெறும் வெளியுறவு சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு சுஷ்மா ஸ்வராஜின் பெயா் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com