வீட்டின் மூலையில் 'இருண்ட' சமையலறைகளின் உருவாக இவர்கள்தான் காரணம்!

வீட்டின் மூலையில் 'இருண்ட' சமையலறைகளின் உருவாக இவர்கள்தான் காரணம்!

பல வீடுகளில் சமையல் அறைகளில் சீக்கிரமாக விளக்குகள் அணைக்கப்படுவதால்

பல வீடுகளில் சமையல் அறைகளில் சீக்கிரமாக விளக்குகள் அணைக்கப்படுவதால் அன்றிரவு சமைக்கவில்லை, உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்விக்கி மற்றும் ஜொமாடோ போன்ற உணவு விநியோக தளங்கள் அதிவேகமா வளர்ந்து விட்ட நிலையில், இந்தியாவிலும் கூட இத்தகைய சமையலறைகள் உருவாகுவதற்கு வழிவகுத்துவிட்டது. அவை சிலரால் "மெய்நிகர்" அல்லது "க்ளவுட்" சமையலறைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இன்னும் சிலர் அதை பேய் என்றும் அழைக்க விரும்புகிறார்கள், காரணம் வீட்டின் சமையல் அறை எங்குள்ளது என்றே தெரிவதில்லையாம். 

ஹால்டிராம், சாயோஸ், கெவென்டர்ஸ், சரவண பவன் மற்றும் வாசுதேவ் அடிகாஸ் போன்ற உள்ளிட்ட உணவகங்கள், ஜொமாடோவுடன் இணைந்து கிளவுட் சமையலறைகளை அமைத்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்த உணவகங்களிலிருந்து அவற்றின் உணவகங்கள் இல்லாத இடங்களிலிருந்தும் நீங்கள் உணவை ஆர்டர் செய்ய முடியும்.

"இதனை நாங்கள் கடந்த ஆண்டு மார்ச் 2018-இல் தொடங்கினோம், வளர்ந்து வரும் தொழில்முனைவோர் புதிய உணவகங்கள் மற்றும் கிளவுட் சமையலறைகளை அமைக்கும் போது, ​​புதிய சமையலறை உள்கட்டமைப்பை அமைப்பதற்கான நேரம் அதிகமாகிறது என்று நாங்கள் உணர்ந்தோம், அதன்பின்னர் இந்த வடிவமைப்பை பின்பற்றுகிறோம்" என்று ஜொமாடோவில் உயர் அதிகாரி மோஹித் சர்தானா கூறினார்.

ஜொமாடோ "மேலும் அவை தங்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரங்களை சிறப்பாக அமைத்துக் கொண்டுள்ளது’’ என்று கூறினார்.

"எங்கள் கூட்டாளர்களுக்கு புதிய சந்தைகளில் பயன்படுத்தவும் விரிவுபடுத்தவும் தரமான சமையலறைகளை நாங்கள் வழங்குகிறோம் என்பதை உறுதிப்படுத்த அதிக நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்துள்ளோம்" என்று சர்தானா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com