சட்டப்பிரிவு 370, சிஏஏ முடிவுகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்: பிரதமர் மோடி

தேச நலனைக் கருத்தில் கொண்டே சட்டப்பிரிவு 370 ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) போன்ற முடிவுகளை மத்திய அரசு எடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பிரிவு 370, சிஏஏ முடிவுகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்: பிரதமர் மோடி


தேச நலனைக் கருத்தில் கொண்டே சட்டப்பிரிவு 370 ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) போன்ற முடிவுகளை மத்திய அரசு எடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் தீனதயாள் உபாத்யாய்-இன் சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பங்கேற்றார். சிலை திறப்புக்குப் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர்,

"சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது, சிஏஏ கொண்டு வருவது போன்ற முடிவுகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன. ஆனால் தேச நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் இவற்றை கையிலெடுத்தோம். மேலும் இவ்விவகாரங்களில் நாங்கள் உறுதியாகவும் இருப்போம். யாரையும் சாராது சுயமாக இருப்பது தொடர்பாக அரசு செயல்பட்டு வருகிறது.

இலவச சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பறைகள் போன்ற எங்களது திட்டங்கள் ஏழைகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. வாராணசியில் ரூ. 25,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளது அல்லது முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்குக் காரணம், உங்களுக்கு சேவையாற்ற சிவன் என்னை ஆசீர்வதித்ததுதான்.

மருத்துவமனை, பள்ளி, சாலைகள், பாலங்கள் மற்றும் தண்ணீருக்கான ரூ. 12,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு உத்தரப் பிரதேசத்துக்கான இணைப்பை மேம்படுத்தி அதை மருத்துவத்துக்கான மையமாக மாற்ற முயற்சிக்கிறோம்.

ரூ. 350 லட்சம் கோடி (5 டிரில்லியன் அமெரிக்க டாலர்) இந்தியப் பொருளாதாரம் குறித்து பேசுகிறோம். அதற்கு சுற்றுலாத் துறை மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com