
கர்நாடகத்தின் மூத்த தமிழரும், "தமிழ் முழக்கம்' இதழின் ஆசிரியருமான வேதகுமார் உடல்நலக் குறைவால் காலமானார்.
கர்நாடகத் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், மூத்த அம்பேத்கரிய சிந்தனையாளரும், "தமிழர் முழக்கம்' இதழின் ஆசிரியருமான வேதகுமார் (85) வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், பெங்களூரு இந்திரா நகரில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (பிப்.16) பிற்பகல் காலமானார். இவரது மனைவி வேதவள்ளி 2013-இல் மறைந்தார். இவருக்கு செந்தாமரைச்செல்வி, கவிமணி பாரதி, இளவரசி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
அல்சூர் லட்சுமிபுரத்தில் உள்ள இடுகாட்டில் திங்கள்கிழமை பகல் 2 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன. தொடர்புக்கு - 9632150273, 8123891538.