கரோனா வைரஸ் பாதிப்பினால் பெட்ரோல், டீசல் விலைகள் குறையும்

ஒட்டுமொத்த சீனாவையும் உலுக்கிப் போட்டிருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பினால், இந்தியர்களின் மாதச் செலவுத் தொகை சற்று குறையும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
கரோனா வைரஸ் பாதிப்பினால் பெட்ரோல், டீசல் விலைகள் குறையும்


ஒட்டுமொத்த சீனாவையும் உலுக்கிப் போட்டிருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பினால், இந்தியர்களின் மாதச் செலவுத் தொகை சற்று குறையும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

ஆம், சீனாவில் பரவி உலக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பாதித்து இதுவரை 1,700 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றினால் சீனாவின் பொருளாதாரம் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், சீனாவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு சர்வதேச அளவில் எரிபொருள் பயன்பாடு மிகப்பெரிய அளவில் சரிந்திருப்பதாக இன்டர்நேஷனல் எனர்ஜி ஏஜென்ஸி தெரிவித்துள்ளது.

இதனால், கச்சா எண்ணெயின் விலை குறைந்து, அதனால், சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலையிலும் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது. 

கரோனா வைரஸ் பாதிப்பினால், சீனாவில் பெரிய அளவில் போக்குவரத்து முடங்கியதை அடுத்து, சர்வதேச அளவில் எரிபொருளின் தேவைக் குறைந்திருப்பதே இதற்குக் காரணம்.

உலக அளவில் எரிபொருள் பயன்பாட்டில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சீனா, தற்போது கரோனா பாதிப்பினால் 5வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பின்னடைவுகள் அனைத்தும் இந்திய நுகர்வோருக்கு சாதகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுவதால், எரிபொருள் விலை தற்போது குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுவே, பெட்ரோல், டீசல் விலைகளை மாற்றமின்றி வைத்திருக்கவும் காரணமாக உள்ளது.

எரிபொருள் விலை குறைவதால், பொருட்களின் உற்பத்திச் செலவு மற்றும் போக்குவரத்துச் செலவும் குறைந்து, கணிசமாக சந்தைகளில் விற்பனையாகும் பொருட்களின் விலையும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com