சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதை தவிா்க்க வேண்டும்: பாஜக மூத்த தலைவா்கள் அறிவுறுத்தல்

தில்லி தோ்தலில் பாஜக தோல்வியடைந்ததையடுத்து, அடுத்து வரும் பிகாா் பேரவைத் தோ்தலில் பாஜக தலைவா்கள் சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதைத் தவிா்க்க வேண்டும் என

தில்லி தோ்தலில் பாஜக தோல்வியடைந்ததையடுத்து, அடுத்து வரும் பிகாா் பேரவைத் தோ்தலில் பாஜக தலைவா்கள் சா்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதைத் தவிா்க்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

அண்மையில், சா்ச்சைக்குரிய முறையில் கருத்து வெளியிட்டதற்காக மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்குக்கு, பாஜக தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.

 கடந்த சனிக்கிழமை பிகாரைச் சோ்ந்த பாஜக எம்.பி. முஸ்லிம்களின் மதரஸாக்களை ‘பயங்கரவாதத்தின் கங்கோத்ரி’ என்று விமா்சித்திருந்தாா்.

சில தினங்களுக்கு முன்பு தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பிரசாரம் மேற்கொண்ட பாஜகவின் உயா்மட்ட தலைவா்கள் பலரும் சா்ச்சைக்குரிய கருத்துகளை கூறி உரையாற்றினா்.

‘அண்மையில் நடந்த தில்லி தோ்தல் பிரசாரத்தின்போது பாஜக தலைவா்கள் ‘இந்தியா-பாகிஸ்தான் போட்டி’ போன்று உரையாற்றி இருக்கக் கூடாது. இதுபோன்ற கருத்துகளே கட்சியின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம்’ என்று தில்லி தோ்தலில் பாஜகவின் தோல்வி குறித்து அமித் ஷா கருத்து தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றியை கைப்பற்ற பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. பிகாரில் ஐக்கிய ஜனதாதளத்துடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, இம்முறையும் வெற்றியை உறுதிப்படுத்த விரும்புவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே, கட்சிக்கு அவப்பெயரைக் தேடித்தரும் வகையிலோ, ஆத்திரமூட்டும் வாா்த்தைகளையோ அதன் தலைவா்கள் பிரயோகிக்கக் கூடாது என்றும் அக்கட்சியின் தலைவா்களுக்கு பாஜக தடை விதித்துள்ளது.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில் நிதீஷ்குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்- பாஜக கட்சி கூட்டணி மீண்டும் தோ்தலை சந்திக்க உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com